எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

பல அனுபவங்களை தந்த எமது பயணம்

     எதிர்கால தலைவர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கான பயணத்தினை மேட்கொள்வதட்கு Sri Lanka Unites   தீர்மானித்தது இதன் நோக்கம் இலங்கை பூராகவும் உள்ள மாணவர்களிடம் இந்த சமாதனத்திட்கும் நல்லினக்கத்திட்குமான செய்தியை இட்டு செல்வதாகும்.


முதலில் மேல்மாகாணத்தில் ஆரம்பமான எமது பயணம் இதில் பலபாடசாலைகளுக்கு சென்றிருந்தோம். முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் மேல்மாகாண பயணம் சற்று கடுமையாகவே அமைந்திருந்தது அத்துடன் கொழும்பில் இருந்த ஆரம்ப நாட்களில் எங்களுக்கு பல பயிற்சிகள் வழங்கப்பட்டது இதன் மூலம் எங்களது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றில் மற்றம் ஏற்பட்டதுடன் எங்களது பேச்சாற்றல் தலைமைத்துவம் மற்றும் சமூக இணக்கம் ஆகியவற்றை வளர்த்து கொள்ளக்கூடியதாக அமைந்தது.
அதனை தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் பயணம் செய்தோம் அங்கு பல்வேறு விதமான மாணவர்களையும் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினோம். இந்த  உரையில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த
தலைவர்களாகிய நாங்களே சமாதனத்தினையும் நல்லினக்கதினையும் பற்றி விளக்கம் அளித்தோம் நாங்கள் பல்வேறு இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணப்பட்டோம் அதனால் எங்களது கருத்துக்களை எளிதாக அந்த மாணவர்களிடம் கொண்டுசேர்க்க முடிந்தது. அத்துடன் அவர்களிடம் இருந்து சிறந்த பின்னூட்டளினயும் பெறக்கூடியதாக இருந்தது. எமது இந்த பயணமானது 36 நாட்கள் தொடர்ந்தது. அதில் 3000 கிலோமீட்டர்களை கடந்து 25 மாவட்டங்களிலும் உள்ள 100 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கும் சென்றிருந்தோம், அது 75 ஒன்றுகூடல்களையும்  பல செயத்திட்டங்கலையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது அத்துடன் இந்த பயணத்தில்  இலங்கையின் 15   மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாணவத்தலைவர்கள் அங்கம் வகித்தனர். அடுத்தபடியாக இந்த பயன்த்திநூடாக Sri Lanka Unites இன் எதிகால திட்டங்களை விளக்கியதுடன் நல்லினக்கத்திட்காக பாடசாலைகளை இணைத்து எதிர்காலத்திட்கான செயற்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு தூண்டுதல்களையும் வழக்கிணோம். இந்த பயணமானது சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இளம் சந்ததியினர் மனதில் வித்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

மாத்தறையில் ஒரு ஓய்வுநாள்

அக்டோபர் 26 அன்று, தீபாவளி நாளில் வேலைகளை விட்டு சற்று ஓய்வெடுத்து எமது அணியை கட்டுவதில் ஈடுபட்டோம். முதலில் நாம் "மாத்தற பத் கடே" (மாத்தறை உணவகம்) என்ற இடத்தில் காலையுணவை அருந்தி விட்டு பின்னர் புறப்பட்டு "பொல்கென" என்ற கடற்கரைக்கு சென்றோம். அங்கு நீச்சல் அடித்து ஒரே குழுவாக இணைந்து கடலின் பல அழகிய விடயங்களை கண்டு ரசித்தோம்.
 

அதன் பின்னர் நாம் அனைவரும் "வேறஹேர" என்ற விகாரையை காணச்சென்றோம். அங்கு தென்னாசிய பகுதியில் காணக்கூடிய மிகப்பெரிய புத்தர் சிலையை பார்வையிட்டோம். இது எம்மில் அனைவருக்கு ஒரு புதிய அனுபவமாக மாத்திரமல்லாமல், பிற மதங்களை பற்றிய ஒரு பரந்த நோக்கையும் ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நாம் அனைவரும் இலங்கையின் தென் முனையாக விளங்கும் தெய்வேந்திர முனைக்கு சென்றோம். அங்கு நாம் சென்றதன் முக்கியத்துவமானது நாம் இலங்கையின் வட முனையாகிய பருத்தித் துறைமுகத்துக்கு செல்லும்போது தெளிவாகும். இது எம்முடைய வீதிப் பயணத்தில் ஒரு முக்கிய சாதனையாகக் கூட கருதலாம்.

நாம் எம்முடைய வழமையான வேலைப்பாடுகளில் ஈடுபடாவிடினும், இந்த நாளானது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஏனெனில், நாம் செல்லும் இந்த வீதிப்பயணம் இலங்கையின் நாலாபக்கங்களிலும் நிறைவாகக் காணப்படும் அழகினை ரசிப்பதற்கும் அதனை குறித்து பெருமை பாராட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகக் கூட விளங்குகின்றது. இந்திய சமுத்திரத்தின் முத்து எனக் கருதப்படும் நம் இலங்கை தேசத்தின் சுந்தரத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க எம்மனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

கேகாலையில் எனது அனுபவம்



காலையில் கண்டியில் இருந்து கேகாலைக்கு சென்றேன். அதனை தொடர்ந்து கேகாலையில் எங்கள் கூட்டங்கள் தொடங்கியது. முதலில் நாம் Kegalle Balika Vidyalaya , Duddly Senanayaka College , Kegalle Maha Vidyala போன்ற பாடசாலைகளுக்கு சென்றோம். பாடசாலைகளுக்கு செல்வது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் அங்கு சிங்கள, புத்தமத பாரம்பரிய விஷயங்களை பார்த்தேன்.


கேகாலை மகா வித்யாலயம் குறிப்பாக ஒரு மறக்க முடியாத அனுபவம், நான் அந்த பள்ளியில் இருந்து ஒரு பையனை சந்தித்தேன். அவரது பெயர் Sanjaya ஆகும். அவர் எதிர்கால தலைவர்கள் மாநாடு - 03 இல் பங்கேற்றார். அவரது தந்தை இலங்கை இராணுவத்தின் ஒரு சிப்பாய் ஆகும், மற்றும் அவர் போரில் அவரது கையை இழந்தவர். அதனால் அவர் தமிழ் மக்களை வெறுத்தார் ஆனால் மாநாட்டிற்கு பிறகு அவருக்கு இரண்டு தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர். அவரை சந்தித்து ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

மாலையில் நாம் Pinnawela யானைகளின் சரணாலயதிற்கு சென்றோம். இரவில் நாம் SANASA வுக்கு சொந்தமான ஒரு Buddhhist இடத்தில் தங்கியிருந்தோம். எமது நண்பர்கள் மஞ்சுலவும் திசரவும் இதை நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த நாள் நாங்கள் Kegalle Balika வித்யாலயதில் ஒரு செயலமர்வினை நடத்தினோம். அத்துடன் நாம் கேகாலையில் எங்கள் நடவடிக்கைகளை முடித்தோம்.

கேகாலை ஒரு அழகான இடத்தில் இருந்தது. அது ஒரு அற்புதமான புவியியல் இயற்கையை கொண்டிருக்கிறது. அதன் காலநிலை சிறப்பானதாக இருந்தது ...


நான், கேகாலை... என் நினைவுகளை மறக்க முடியாது.


நன்றி!
ஆக்கம் - Sanjeevan Marine
மொழி மாற்றம் - Arzath Areeff

கடுமையாக அமைந்த கொழும்பு மாவட்ட பயணம்

க்டோபர் 3ஆம் திகதி எமது பயணத்தினை ஆரம்பித்த நாம் தேர்தல், ஆசிரியர் தினம், ஷேக்ஸ்பியர் நாடக போட்டிகள் போன்ற போன்ற காரணங்களால் பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டோம்.



இந்த பின்னடைவின் போதிலும் நாம் வெஸ்லி கல்லூரி, Elizabeth Moir International, மேதொடிஸ்ட் கல்லூரி மற்றும் ராயல் கல்லூரியில் அசெம்பிளிகளை நடத்தி சமாளித்தோம்.

அதனை தொடர்ந்து ராயல் கல்லூரி திறன் மையத்தில் கொழும்பு மாவட்டத்திற்கான செயலமர்வினை நடத்தினோம்.
கடந்த 9ம் திகதி கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணமானோம்
கண்டியில் இடம்பெற்ற விடயங்கள் அடுத்த பதிவில் எதிபாருங்கள்...

பாடசாலை ஒற்றுமைக்கான பயணம் 2011

FLC season 3 இன் பெரும் வெற்றியை அடுத்து, இலங்கை தீவில் உள்ள அனைத்து பங்கு பெறும் பள்ளிகளுக்கும் செல்ல முடிவுசெய்யப்பட்டது. இது மிகவும் திட்டமிடப்பட்டும் கடின உழைப்புக்கு பின்னரும் அக்டோபர்  3, 2011 அன்று நாம் கொழும்பில் இருந்து நீண்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான வரலாற்று பயணத்தை ஆரம்பித்தோம்.


இது பற்றி மேலும் பல தகவல்களை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்
அத்துடன் எங்களுடன் என்றும் தொடர்பில் இருங்கள்.....