அதனை தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் பயணம் செய்தோம் அங்கு பல்வேறு விதமான மாணவர்களையும் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினோம். இந்த உரையில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த
எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்
பல அனுபவங்களை தந்த எமது பயணம்
அதனை தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் பயணம் செய்தோம் அங்கு பல்வேறு விதமான மாணவர்களையும் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினோம். இந்த உரையில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த
மாத்தறையில் ஒரு ஓய்வுநாள்
அதன் பின்னர் நாம் அனைவரும் "வேறஹேர" என்ற விகாரையை காணச்சென்றோம். அங்கு தென்னாசிய பகுதியில் காணக்கூடிய மிகப்பெரிய புத்தர் சிலையை பார்வையிட்டோம். இது எம்மில் அனைவருக்கு ஒரு புதிய அனுபவமாக மாத்திரமல்லாமல், பிற மதங்களை பற்றிய ஒரு பரந்த நோக்கையும் ஏற்படுத்தியது.
நாம் எம்முடைய வழமையான வேலைப்பாடுகளில் ஈடுபடாவிடினும், இந்த நாளானது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஏனெனில், நாம் செல்லும் இந்த வீதிப்பயணம் இலங்கையின் நாலாபக்கங்களிலும் நிறைவாகக் காணப்படும் அழகினை ரசிப்பதற்கும் அதனை குறித்து பெருமை பாராட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகக் கூட விளங்குகின்றது. இந்திய சமுத்திரத்தின் முத்து எனக் கருதப்படும் நம் இலங்கை தேசத்தின் சுந்தரத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க எம்மனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
கேகாலையில் எனது அனுபவம்

காலையில் கண்டியில் இருந்து கேகாலைக்கு சென்றேன். அதனை தொடர்ந்து கேகாலையில் எங்கள் கூட்டங்கள் தொடங்கியது. முதலில் நாம் Kegalle Balika Vidyalaya , Duddly Senanayaka College , Kegalle Maha Vidyala போன்ற பாடசாலைகளுக்கு சென்றோம். பாடசாலைகளுக்கு செல்வது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் அங்கு சிங்கள, புத்தமத பாரம்பரிய விஷயங்களை பார்த்தேன்.
கேகாலை மகா வித்யாலயம் குறிப்பாக ஒரு மறக்க முடியாத அனுபவம், நான் அந்த பள்ளியில் இருந்து ஒரு பையனை சந்தித்தேன். அவரது பெயர் Sanjaya ஆகும். அவர் எதிர்கால தலைவர்கள் மாநாடு - 03 இல் பங்கேற்றார். அவரது தந்தை இலங்கை இராணுவத்தின் ஒரு சிப்பாய் ஆகும், மற்றும் அவர் போரில் அவரது கையை இழந்தவர். அதனால் அவர் தமிழ் மக்களை வெறுத்தார் ஆனால் மாநாட்டிற்கு பிறகு அவருக்கு இரண்டு தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர். அவரை சந்தித்து ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.
மாலையில் நாம் Pinnawela யானைகளின் சரணாலயதிற்கு சென்றோம். இரவில் நாம் SANASA வுக்கு சொந்தமான ஒரு Buddhhist இடத்தில் தங்கியிருந்தோம். எமது நண்பர்கள் மஞ்சுலவும் திசரவும் இதை நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த நாள் நாங்கள் Kegalle Balika வித்யாலயதில் ஒரு செயலமர்வினை நடத்தினோம். அத்துடன் நாம் கேகாலையில் எங்கள் நடவடிக்கைகளை முடித்தோம்.
கேகாலை ஒரு அழகான இடத்தில் இருந்தது. அது ஒரு அற்புதமான புவியியல் இயற்கையை கொண்டிருக்கிறது. அதன் காலநிலை சிறப்பானதாக இருந்தது ...
நான், கேகாலை... என் நினைவுகளை மறக்க முடியாது.
நன்றி!
ஆக்கம் - Sanjeevan Marine
மொழி மாற்றம் - Arzath Areeff
கடுமையாக அமைந்த கொழும்பு மாவட்ட பயணம்
அக்டோபர் 3ஆம் திகதி எமது பயணத்தினை ஆரம்பித்த நாம் தேர்தல், ஆசிரியர் தினம், ஷேக்ஸ்பியர் நாடக போட்டிகள் போன்ற போன்ற காரணங்களால் பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டோம்.இந்த பின்னடைவின் போதிலும் நாம் வெஸ்லி கல்லூரி, Elizabeth Moir International, மேதொடிஸ்ட் கல்லூரி மற்றும் ராயல் கல்லூரியில் அசெம்பிளிகளை நடத்தி சமாளித்தோம்.
அதனை தொடர்ந்து ராயல் கல்லூரி திறன் மையத்தில் கொழும்பு மாவட்டத்திற்கான செயலமர்வினை நடத்தினோம்.
கடந்த 9ம் திகதி கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணமானோம்
கண்டியில் இடம்பெற்ற விடயங்கள் அடுத்த பதிவில் எதிபாருங்கள்...
பாடசாலை ஒற்றுமைக்கான பயணம் 2011
இது பற்றி மேலும் பல தகவல்களை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்
அத்துடன் எங்களுடன் என்றும் தொடர்பில் இருங்கள்.....

