எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

மாத்தறையில் ஒரு ஓய்வுநாள்

அக்டோபர் 26 அன்று, தீபாவளி நாளில் வேலைகளை விட்டு சற்று ஓய்வெடுத்து எமது அணியை கட்டுவதில் ஈடுபட்டோம். முதலில் நாம் "மாத்தற பத் கடே" (மாத்தறை உணவகம்) என்ற இடத்தில் காலையுணவை அருந்தி விட்டு பின்னர் புறப்பட்டு "பொல்கென" என்ற கடற்கரைக்கு சென்றோம். அங்கு நீச்சல் அடித்து ஒரே குழுவாக இணைந்து கடலின் பல அழகிய விடயங்களை கண்டு ரசித்தோம்.
 

அதன் பின்னர் நாம் அனைவரும் "வேறஹேர" என்ற விகாரையை காணச்சென்றோம். அங்கு தென்னாசிய பகுதியில் காணக்கூடிய மிகப்பெரிய புத்தர் சிலையை பார்வையிட்டோம். இது எம்மில் அனைவருக்கு ஒரு புதிய அனுபவமாக மாத்திரமல்லாமல், பிற மதங்களை பற்றிய ஒரு பரந்த நோக்கையும் ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நாம் அனைவரும் இலங்கையின் தென் முனையாக விளங்கும் தெய்வேந்திர முனைக்கு சென்றோம். அங்கு நாம் சென்றதன் முக்கியத்துவமானது நாம் இலங்கையின் வட முனையாகிய பருத்தித் துறைமுகத்துக்கு செல்லும்போது தெளிவாகும். இது எம்முடைய வீதிப் பயணத்தில் ஒரு முக்கிய சாதனையாகக் கூட கருதலாம்.

நாம் எம்முடைய வழமையான வேலைப்பாடுகளில் ஈடுபடாவிடினும், இந்த நாளானது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஏனெனில், நாம் செல்லும் இந்த வீதிப்பயணம் இலங்கையின் நாலாபக்கங்களிலும் நிறைவாகக் காணப்படும் அழகினை ரசிப்பதற்கும் அதனை குறித்து பெருமை பாராட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகக் கூட விளங்குகின்றது. இந்திய சமுத்திரத்தின் முத்து எனக் கருதப்படும் நம் இலங்கை தேசத்தின் சுந்தரத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க எம்மனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply