எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

ஓன்று சேர்வோம் இலங்கை புதிய அலுவலக திறப்புவிழா மற்றும் அறங்காவலர் குழு கூட்டம்

எமது அமைப்பின் புதிய அலுவலக திறப்புவிழா கடந்த வெள்ளிக்கிழமை (03.02.2012) கொழும்பு பொரல்லை இல் மிகசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய அலுவலகம் 113, கின்சி வீதி, பொரல்லை இல் உத்தியோக பூர்வமாக திறந்து வெய்க்கப்பட்டதுடன் School Relations Tour 2011 இல் கலந்து கொண்ட கணவு அணியினருக்கு(Dream Team) விருது வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

இங்கு அதிதிகளாக ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பின் அறங்காவலர் குழு(Board of trustees) உறுப்பினர்களான தூதுவர் ஜயந்த தனபால, திரு குசில் குணசேகர, திருமதி நயனா கருணாரத்தன ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்களுடன் ஓன்று சேர்வோம் இலங்கை அணினர் மற்றும் ஓன்று சேர்வோம் இலங்கை ஜுனியர் அணியினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தின் ஒரு அங்கமாக ஊடகவியலாளர் சந்திப்பும் இடம் பெற்றது இதன்போது ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பினை பற்றிய விளக்கம் அளிக்கப் பட்டதுடன் School Relations Tour 2011 பற்றிய அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


Leave a Reply