எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

எதிர்கால தலைவர்கள் மாநாடு பருவம் 5 க்கான அறிவித்தல்


எமது ஒன்றுகூடும் இலங்கை அமைப்பின் மிக முக்கிய வருடாந்த நிகழ்வான எதிர்கால தலைவர்கள் மாநாடு இன்னும் மூன்றுமாதங்களில் இடம்பெற உள்ளது, கடந்தவருடம் வடபகுதியை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் தமிழ் கலாச்சார அம்சங்களுடன் யாழ் மண்ணில் இடம்பெற்ற இந்நிகழ்வு இம்முறை இலங்கையின் தென் பகுதியில் சிங்கள கலாச்சார பிரதிபலிப்புடன் காலியில் இடம்பெற உள்ளது, இந்நிகழ்வில் தன்னார்வ தொண்டராக இணைந்து கொள்ள  நீங்கள் விரும்பினால் கீழ்காணும் உரலியின் ஊடக தொடர்புகொள்ளுங்கள் 
http://www.srilankaunites.org/flcform/index.php?embed=1

ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் அணியினருக்கான மீள் சந்திப்பு 2013


பாரிய கடப்பாடுகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் மத்தியில் ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான அணியினருக்கான மீள் சந்திப்பு 2013 அண்மையில் புத்தளம் மாவட்டத்தில்  மாதம்பே "அபே கடெள்ள" யில்  இடம்பெற்றது இதில் எமது அமைப்பின் உட்கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் பிரதான இலக்குகளை அடைவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பிரதானமாக கலந்தாலோசிக்கப்பட்டது. 

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது நாளில்  அணி அங்கத்தவர்கள் தங்களது வேலைகளின் அடிப்படையில் தங்களுக்கு உரித்தான துறைகளுக்கு நியமிக்கப்பட்டனர் அத்துடன் அன்றைய தினம் எமது அணி அங்கத்தவரான விந்தியா பீரிஸ் பிறந்ததினமாகையால் அவரை வாழ்த்தி பரிசுகளும் வழங்கப்பட்டது . இரண்டாவது நாளில் முதலாவதாக அணியினை கட்டியெலுப்புவதட்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன இதனூடாக புதிய அங்கத்தவர்களுடனான பரஸ்பர அறிமுகம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து  திட்டமிடல் அமர்வு இடம்பெற்றது இதில் எதிர்காலத்தில் நடத்தப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் பற்றியும் நிகழ்ச்சிகள்பற்றியும் திட்டங்கள் முன்வேய்க்கப்பட்டது அடுத்ததாக ஓன்று கூடும் இலங்கையின் அமைப்பு வட்டம் விபரிக்கப்பட்டதுடன் இலக்குகள் பற்றிய புள்ளிவிவரங்களும் ஆராயப்பட்டன. அதனையடுத்து துறைகளை உருவாக்குதலும் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது மேலும் துறைகளுக்கு தமக்கான கடமைகளும் விளக்கப்பட்டன அத்துடன் ஒவ்வொரு துறையினரும் தமக்கே உரித்தான சுய இலக்குகளை வகுத்துக்கொண்டனர். அன்றையதினம்  மாலைவேளையில்  சிறுவர் இல்ல சிறார்களுடன் தங்களது நேரத்தை செலவிடமுடிந்தது. அதன்பின்னர்  ஒவ்வொரு துறையினரும் தாங்கள்  தயார்செய்த தங்களது அணி பற்றிய விளக்கத்தினை அனைவருக்கும் வழங்கினர். அத்துடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன மூன்றாவது நாளில் பிரதானமாக ஒவ்வொரு துறையினரும் தாங்கள் ஈடுபடும் வெளித்திட்டம் பற்றிய மாதாந்த அறிக்கையினை சமர்பிக்கவேண்டியது பற்றி வலியுறுத்தப்பட்டது இந்நிகழ்வின்மூலம் ஓன்று கூடும் இலங்கை அமைப்பிற்கு புதிய ஊக்கமும் உத்வேகமும் அழிக்கப்பட்டுள்ளதுடன் துரிதசெயற்பாடுகளுக்கான வழிகாட்லகளும் வழங்கப்பட்டுள்ளன இதன் மூலம் தற்போது காணப்படும் துறைகள் பின்வருமாறு 
  1.  நல்லிணக்க நிலையத்துறை
  2. மக்கள் தொடர்பு  துறை 
  3. சஹாசார இதழ் துறை
  4. நிர்வாக துறை
  5. பாடசாலைகள் தொடர்பு துறை
  6. பிராந்திய பிரதிநிதிகள் துறை
  7. எதிர்கால தலைவர்கள் மாநாட்டு துறை
  8. SHOW YOU CARE  (பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கான) துறை என்பனவாகும்.

முல்லைத்தீவு நல்லிணக்க மையமும் தொழில் பயிற்சிகளும்


யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய முல்லைத்தீவு மக்களுடைய மனதில் அவர்களது எதிர்காலத்தை குறித்து  பல்வேறு கேள்விகள். சொந்த இடத்திற்கு திரும்பிய திருப்தி இவர்களிடம் காணப்படுகின்ற போதிலும், மீள்குடியேற்றப்பட்டு 3 வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்கையில் முன்னேற்றங்கள் இல்லையே என்ற ஏக்கமும் இவர்களிடம்  காணப்படுகின்றது. முக்கியமாக உயர் தரக் கல்வியை முடித்தவர்கள், பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டவர்கள்  அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ஏனெனின் உயர் தரத்தில் சித்தியடைந்து சிலர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  வசதியுடைய சிலர் நகர்ப்புறங்களிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்வதோடு ஏனையோர் தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்கின்றனர். மிகவும் குறைந்த வாய்ப்புகள் மற்றும் வளங்களின் காரணமாகவே இந்நிலை அங்கு நிலவுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி  முல்லைத்தீவு இளைஞர், யுவதிகளுக்கு ஒரு  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துகொடுப்பதை நோக்காகக் கொண்டு, இவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக, ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையமானது கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை எனும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்  நல்லிணக்க மையத்தினூடாக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, வர்த்தக முயற்சியாண்மை போன்றவற்றில் மாணவர்கள் தமது திறன்களை விருத்திசெய்வதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலவசமாக வழங்கப்படும் இவ் பயிற்சி நெறிகள் ஊடாக மாணவர்கள் முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கருத்திற் கொண்டு கணணி, இன்டர்நெட் போன்ற பல வசதிகள் இங்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் இம் முயற்சியானது நவீன காலகட்டதிற்கு ஏற்ப புதிய தொழில் முறைகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவது மாத்திரமின்றி இதனூடாக புதிய தொழில் வாய்ப்புக்கைளை இம்மக்கள் பெற்றுக்கொள்வதட்கும் இது வழிவகுக்கின்றது. 
      

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியின் ஆரம்பம்


பெண்களுக்கு எதிரான வன்முறையானது தீர்வற்ற ஒன்றாக, காலங் காலமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் இலங்கையிலும் இப்பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வரும் செயலாக காணப்படுகின்றது. முக்கியமாக கொழும்பு போன்ற பிரதான நகர்ப்புறங்களில் அதிகமான  சந்தர்ப்பங்களில் பெண்கள் பல வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதிலும் முக்கியமாக பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்களிடம் வார்த்தை பிரயோகங்களால்,     உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் வன்முறைக்குட்பட்ட  அனுபவங்கள் அதிகமாகவே உள்ளன. சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆய்வொன்றின் அடிப்படையில், 15 தொடக்கம் 45 வயதிட்கிடைப்பட்ட 70 வீதமான பெண்களிடம் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, பாலியல் ரீதியான வன்முறைக்குட்பட்ட அனுபவங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் நீண்ட காலமாக அமைதியாகவே  இருந்து வருகின்றனர். இந்த அமைதியை கலைப்பதற்கான ஒரு முன்னெடுப்பே ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SHOW YOUR CARE எனும் நிகழ்ச்சித்திட்டமாகும். இளம் தொண்டர்களையும், பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று இப்பிரச்சினைக்கு எதிர்நின்று செயற்படுவதன் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பு தீர்மானித்ததற்கிணங்க, இத்திட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலுள்ள திறந்த வெளி திரையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இளம் தொண்டர்களும், கொழும்பிலுள்ள பிரபல ஆண் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பாதிப்புக்கள் எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகின்றது என்பதை மையப்படுத்திய மக்கள் அரங்கம் (Forum Theatre) நிகழ்ச்சியும், கலந்துரையாடல்களும் நடைபெற்றிருந்ததோடு வித்தியாசமான வயதெல்லைகளையும், கலாசார பின்னணிகளையும் கொண்ட பெண்கள் பொதுசன போக்குவரத்தின்போது தாம் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.   

SHOW YOUR CARE  திட்டமானது முதலாவதாக 2012 ஜூன் 25 தொடக்கம் 29 ஆம் திகதி வரை கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இளம் தொண்டர்களையும், பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய 200 பேரைக் கொண்ட குழுவினர் சுவரொட்டிகள் மற்றும், துண்டு பிரசுரங்களுடன் பஸ்களுக்குள் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு  எதிராக ஆண்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், சட்டத்தில் எது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்த விழிப்புணர்வையும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில்  வழங்கியிருந்தனர்.SHOW YOUR CARE குழு 5 நாட்களில் சுமார் 1000 பஸ்களில் இந்த விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டிருந்தது. 

வெற்றிகரமாக நடைபெற்ற முதற்கட்ட SHOW YOUR CARE  திட்டத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதேவேளை இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கண்டி மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில்  விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


5 ஆவது எதிர் கால தலவைர்கள் மாநாட்டிற்கான ஆயத்தங்கள் ஆரம்பம்


ஆம் , யாழ்  மண்ணில் வெற்றி கரமாக நடந்தேறிய மாநாட்டை தொடர்ந்து இப்போது 5 ஆவது முறையாக எதிர் கால தலைவர்கள் மாநாட்டை நடாத்தும்  பணிகள் ஆரம்பமாகிவிட்டன. 4 ஆவது மாநாடு நடந்து முடிந்து எம் ஒன்று கூடும் பணியின் தாகம் தணியும் முன் எமது 5 ஆவது மாநாட்டுக்கான வேலைகளை  எம்முடன் இணைந்து பல இள இரத்தங்கள் முன்னெடுத்து நடாத்திவருகின்றனர் . இம்முறை நடத்த இருக்கும் இவ் 5 ஆவது எதிர்கால தலைவர்கள் மாநாடும் நாடளாவிய ரீதியில் சமாதானத்துக்கும் ஒன்று கூடலுக்கும் வித்திடுவதில் ஒரு மைல்கல்லாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

5 ஆவது மாநாடுக்கான தளம் இதுவரையிலும் உறுதி படுத்தப்படாத பட்சத்திலும் அதனை முதன் முறையாக இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் நடாத்த எண்ணுவதுடன் அதற்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இம் மாநாட்டில் 25 மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் வருகை தந்து, எந்த வித ஏற்றத்  தாழ்வுகளும் இன்றி இலங்கைர்யா என்ற ஒரே ஒரு அடையாளத்துடனும் சமத்துவத்துடனும் 5  நாட்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து எதிர் கால தலை முறையை ஒழுங்கான ஒரு பாதையில் வழி நடத்திச் செல்லும் எதிர்கால தலைவர்கள் ஆவதற்கு இட்டுச்செல்லும் ஒரு மாநாடே இது.

இதற்கான திட்டமிடல் ஏற்கனவே ஒன்று கூடுவோம் இலங்கையின் பிரதான அலுவகத்தில் தொடங்கியுள்ளது. இம் மாநாட்டை எவ்வாறு, வெவ்வேறு கோணங்களில் மேலும் செப்பமாக்கலாம் என்பதிலும் எவ்வாறு மாணவர்களுக்கு மேலும் செம்மைப்படுத்தப் பட்ட முறையில் புகட்டலாம் என்பதிலும் எமது ஏற்பாட்டுக் குழு மும்மரமாக செயற்பட்டு வருகின்றது.  பொது மக்கள் தொடர்பாடல் குழு 5 ஆவது எதிர் கால தலைவர்கள் மாநாட்டை  மையப் படுத்தி ஒன்று கூடுவோம் இலங்கையில் நடைபெறும் விடையங்களை பற்றிய தொடர்ச்சியான தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளனர். மேலும் தெற்கு பிரதேசதிலுள்ள ஒரு மாணவர்க்குழு அங்கு ஏற்பாடு செய்யவேண்டிய விடயங்களை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இம் முறை ஒழுங்கு படுத்தும் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் பல சவால்களை எதிர் பார்த்த வண்ணம் முழு அர்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் எப்படியாவது  இம் மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தி காட்ட வேண்டும் என்ற அவாவுடனும் ஆவலுடனும் உற்சாகமாக பணி  புரிந்து வருகின்றனர்.

Road Trip 2012 கனவு அணியின் பயணம்...








1வது நாள்
அன்று திங்கட்கிழமை அக்டோபர் முதலாம் தேதி 2012 பல  கனவுகளுடன் எங்களது கனவு அணி 2012 தங்களது பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தது.

இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் இருந்து இவ்வருடம் உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்கள் இந்த கனவு அணியில் இணைத்து கொள்ளப்பட்டனர்.
அறியாத முகங்கள் தெரியாத நபர்களுடன் இணைத்து  எமது பயணத்தை ஆரம்பித்தோம்.

முதலில் உயர்ஸ்தானிகர் ஜயந்த தனபால அவர்களுடன் 2012 கனவு அணியின் அங்கத்தவர்கள் ஒரு கலந்துரையாடலின் ஈடுபட்டார்கள்.அது மட்டும் இன்றி அன்று காலை U.N.P கட்சியின் உறுப்பினரான திரு.எரான் விக்ரமரத்ன வை சந்தித்தோம்.

பின் மாலை நேரத்தில் திரு. ராஜீவ் விஜெயசிங்க்ஹா  யை சந்தித்தோம்.இதுதான் எங்கள்  பயணத்தின் முதலாவது நாள்.
எங்கள் இரவை நாம் உவெஸ்லி கலூரியில் கழித்தோம்.


2வது நாள்
எமது இரண்டவது நாள் கொழும்பில் இருந்து கம்பஹா மாவட்டதை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்.

றாகம பசிலிக்கா கல்லூரியில் எமது முதலாவது பயிற்சியை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம் .

அதை தோடர்ந்து நாம் மொனறாகலையை நோக்கி பயணம்செய்ய தொடங்கினோம்.
அன்று இரவு நாம் மொனராகலையில் உள்ள பிக் விஎவ் ஹோடெல்லில் தங்கினோம்



3வது நாள்
ரத்னபுரியில் உள்ள தர்மபால மகாவித்யாலயத்தில் எமது ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் காலை கூட்டம் நடைபெற்றது.


பின் நாம் அப்பாடசாலையில் உள்ள 
மாற்று திறநாளிகளுடன் எமது நேரத்தை கழிதோம்

இதன் பின் நாம் மோனரகலையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிதோம்.

இரவு 9.30 க்கு மோனரகலையை சென்றடைந்தோம்.
அன்று இரவு நாம் படிக்கவேண்டிய பாடத்தை படித்தபின் அடுத்த நாளின் செயற்பாட்டை திட்டமிட்டோம்.


4வது நாள்
நான்காவது நாள் எமது பயணத்தில் மறக்கமுடியாத நாள். 
ஏனெனில் அன்று இரண்டு பயிற்சிகள் நடைபெற்றது, அதுவும் இரு வேறு இடங்களில்.
நாம் காலையில் மொனராகலை ராஜகீய மகாவித்யலயத்தில் முதலாவது பயிற்சியை தொடங்கினோம்.

பயிற்சியின் அரைவாசியில் இரண்டு குழுவாக பிரிந்து ஒரு குழு அக்கறைப்பற்றுயை  நோக்கி புறப்பட்டது.

இரண்டவது பயிற்சி அக்கறைப்பற்றில் உள்ள அக்கறைப்பற்று சென்ட்ரல் கல்லூரியில்  நடைபெற்றது. 




இங்குதான் ஹக்கானியும் பிஷாமும் எம்முடன் எனது பயணத்தில் இணைத்தனர்
அது மட்டுமன்றி 2011 கனவுக்குழுவின் உறுபினர்களான அர்சத்தும் அச்பாக்கும் எம்முடன் இணைந்தனர்.




அன்றிரவு எமது இராபோஜனம் இஸ்லாமிய முறைபடி சவானில் சாப்பிட்டோம்.  


5வது நாள்
ஐந்தாவது நாள் எமக்கு ஒரு ஒய்வு நாளாக இருந்தது.ஒய்வுநாளாக இருந்தாலும் நாம் எமது பிரயாணத்தை திருகோமலையை நோக்கி ஆரம்பித்தோம். 

திரிகோணமலைக்கு செல்லும்வழியில் நாம் பாசிகுடா கடற்கரைக்கு சென்றோம்.

அங்கு நாம் அனைவரும் காற்பந்து விளையாடியபின் நீராடசென்றோம்.






பின் இரவு நாம் உணவு அருந்தும்போது அர்ச்சதின் பிறந்தநாளை கொண்டாடினோம். அத்துடன் நாங்கள்  எமது இரவை இருக்கங்கண்டியில் கழித்தோம்


6வது நாள்
ஆறாவது நாள் எமது பயிற்சி திருகோணமலை மெடிஸ்  கல்லூரியில் நடந்தது.

இது ஒரே நாளில் ஒழுங்குசெய்யப்பட்டது. 2012 கனவுக்குழுவின் உறுப்பினரான சாயின், மாமி தான்  இக்கல்லூரியின் அதிபர்
இதனால்தான் நாம் திருகோணமலையில் திடீரென்று ஒரு பயிற்சியை நடத்தினோம்.ஏனெனில் எமது பயிற்சி பட்டியலில் திருகோணமலை மாவட்டம் இருக்கவில்லை.

இதன் பின் நாம் யாழ்பாணத்தை நோக்கி பயணம் செய்யும்
வழியில் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறை படித்தோம் .


ஓன்று சேர்வோம் இலங்கை, நல்லிணக்த்திற்காக...


ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பை பற்றி அறிய முன்னர் நல்லிணக்கம் என்ற சொல்லை பற்றி நீங்கள் அறிவீர்களா ? இந்த நல்லிணக்கத்திட்கு பல மொழிகளிலும் பல கருத்துக்கள் காணப்படுகின்றன சமதாணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பை ஏற்படுத்துதல், சுதந்திரத்தை, ஏற்படுத்துதல் போன்றவற்றுடன் பிறட்சனையில் காணப்படுகின்ற இரு தரப்பினர்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துதல் என்பவற்றை குறிப்பிடலாம் அத்துடன் பொதுவான ஒரு விளக்கமாக கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து நல்லுறவை மீண்டும் உருவாக்குதல் எனக்கொள்ளலாம்.

இன்று எமது நாட்டை பொறுத்தவரையில் இந்த நல்லிணக்கம் என்ற வார்த்தை பரவலாக பேசப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. ஆனாலும் கூட இந்த நல்லிணக்கம் ஏன் வழியுருத்தப்படுகின்றது, எதற்காக ஏட்படுதப்பட வேண்டும் இதன் மூலம் எதனை உணர்த்தப் போகின்றோம் என்ற பல கேள்விகள் உங்களுக்கு எழலாம், இதற்கு விடைகான நாம் எமது கடந்த காலத்தையும் இன்றைய நிலைப்பாட்டையும் பற்றி சிந்திக்க வேண்டும் கடந்த முப்பது வருட காலமாக கொடிய போரின் பிடியில் சிக்கி பல கொடுமைகளயும் இன்னல்களையும் உயிர் இழப்புக்களையும் எதிர்கொண்ட எமது நாட்டில் இன்று பரவலான சமாதானமும் அமைதியும் நிலவுகின்றது ஆனாலும் எமது நாட்டு மக்களின் மனநிலையானது இன்னும் குழப்பமானதாகவும், பிற இனத்தவரை பற்றிய கலக்கம் நிறைந்ததாகவும், தெளிவான ஒரு தீர்வுக்கு வர முடியாததாகவுமே காணப்படுகின்றது இதற்கான காரணம் எமது நாட்டில் காணப்படுகின்ற இன, மத குழுக்களிடையே புரிந்துணர்வின்மையும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்லாமையுமே ஆகும். இதனை நாம் ஒரு குறையாக கூற முடியாது ஏனெனில் இத்தனை வருட காலமும் இனப்பிரச்சனையிலும் பிரிவினையிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்த மக்களிடத்தே ஓர் இரவிற்குள் சமாதானம் வந்துவிட்டது எனக்கூறுவது சாத்தியமற்றது ஆனால் இவர்களுக்கிடையே புரிந்துணர்வு மூலம் நல்லிணக்கம் ஏற்பட்டால் மட்டுமே உண்மையான சமாதானம் எனும் இலக்கு சாத்தியம் ஆகின்றது. ஏனனெனில் பல்வேறு விதமான கொள்கைகளிலும் பலவிதமான கருத்துவேருபாடுகளிலும் காணப்படுகன்ற மக்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் நல்லிணக்கம் ஆனது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

 இவ்வாறான நல்லினக்கத்தினை அடைவதையே தனது இலக்காகக்கொண்டு இயங்கிவரும் ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பினை பற்றி உங்களிடையே இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். இந்த அமைப்பானது இலங்கையின் இளம் தலைமுறையினராகிய இளைஞர்களையும் மாணவர்களையும் நோக்காக கொண்டே செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து இன மதங்களையும் சேர்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற இளைஞர்களே இவ்வமைப்பை வழிநடத்துகின்றனர்.

அத்துடன் எமது வழிகாட்டியாகவும் அறிவுரையாலர்களாகவும் பல்வேறு துறைகளில் முன்மாதிரியான நபர்களைக்கொண்ட அறங்காவலர்கள் சபையும் காணபடுகின்றது. இதில் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஒழிப்புக்கான முன்னால் நேருதவிச் செயலாளர் தூதுவர் ஜயந்த தனபால அவர்கள் காணப்படுகிறார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றி தனித்துனின்று வெற்றிகரமாக செயற்பட்டு நல்லிணக்கத்திற்காகவும், எமது நாட்டை கட்டியெளுப்புவதற்காகவும் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. தற்போது எமது அமைப்பில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த நுற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் இணைந்துள்ளன. எமது நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளில் முக்கிய நிகழ்வாக எதிர்கால தலைவர்கள் மாநாடு காணப்படுகின்றது. கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் இம் மாநாட்டின் மூலம் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 25 மாவட்டங்களில் இருந்தும் 1000 க்கு அதிகமான மாணவர்கள் ஓர் இடத்தில் ஓன்று கூடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது இதன் மூலம் பல்வேறு பட்ட இனங்களிலும் கலாச்சாரங்களிலும் இருந்து வந்த மாணவர்கள் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொள்ளவும் அவர்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் இம்மாநாடு ஒரு களமாக அமைகின்றது. அத்தோடு அவர்களுக்கு தலைசிறந்த பேச்சாளர்களின் மூலம் பல விளக்கங்கள் அளிக்கப்படுகின்றது, மற்றும் குளுச்செயற்பாடுகளின் மூலம் தலைமைத்துவம், ஆளுமை, ஐக்கியம் பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்படுவதோடு குழு மணப்பான்மை, சகோதரத்துவம் என்பன கட்டியெழுப்பப்படுகின்றது கடந்த வருடம் கண்டியில் இடம்பெற்ற இம்மாணாடானது இவ்வருடம் யாழ்நகரில் இடம்பெறவுள்ளது.


இத்துடன் எமது முயற்சிகளை முடித்து விடாமல் இதன் தொடர்ச்சியாக வேறுபட்ட மாவட்டங்களில் உள்ள இரு பாடசாலைகளை இணைத்து அவர்களிடையே CHAMPIONS OF CHANGE எனும் வேலைத்திட்டத்தினை செயட்படுத்துவத்தன் மூலம் மாணவர்கள் தாமாகவே நல்லிணக்கம் பற்றிய செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர் கடந்தகாலங்களில் இவ்வேலைத்திட்டம் மூலம் பல பாடசாலைகள் ஏனைய பாடாளைகளுடன் நல்லுறவை பேணிவருவதுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது உதாரணமாக தென்மாகாணத்தை சேர்ந்த கேகாலை வித்தியாலயம் வடமாகாணத்தை சேர்ந்த முல்லைதீவு வற்றாப்பளை பாடசாலையுடன் இணைந்து முல்லைத்தீவு மாணவர்களுக்கான கல்விக்கான உபகரணங்கள், புத்தகங்கள் வழங்குதல் கல்வி வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்ச்சி போன்ற செயற்பாடுகளை மேட்கொண்டத்தை குறிப்பிடலாம். அதனை அடுத்து கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட SCHOOL RELATION TRIP செயட்திட்டத்தில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ பிரதிநிதிகளை கொண்ட SLU Junior team ஆனது இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அப்பாடசாலைகளில் ஒன்றுகூடல்களை நடத்தி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திட்குமான செய்தியை வழங்கினர். இவ்வாறான எமது அமைப்பின் செயற்பாடுகள் தீவலாவியரீதியில் மட்டும் நின்று விடாமல் பிறநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் மூலமும் சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பானது அவுஸ்திரேலியா, கனடா, நயுசிலாந்து, இங்கிலாந்து, அமேரிக்கா, தென்னாபிரிக்கா, இந்தியா, கென்னியா, கொங்கோ ஆகிய நாடுகளிலும் உத்தியோகபூர்வமாக இயங்கிவருகின்றது.