எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

5 ஆவது எதிர் கால தலவைர்கள் மாநாட்டிற்கான ஆயத்தங்கள் ஆரம்பம்


ஆம் , யாழ்  மண்ணில் வெற்றி கரமாக நடந்தேறிய மாநாட்டை தொடர்ந்து இப்போது 5 ஆவது முறையாக எதிர் கால தலைவர்கள் மாநாட்டை நடாத்தும்  பணிகள் ஆரம்பமாகிவிட்டன. 4 ஆவது மாநாடு நடந்து முடிந்து எம் ஒன்று கூடும் பணியின் தாகம் தணியும் முன் எமது 5 ஆவது மாநாட்டுக்கான வேலைகளை  எம்முடன் இணைந்து பல இள இரத்தங்கள் முன்னெடுத்து நடாத்திவருகின்றனர் . இம்முறை நடத்த இருக்கும் இவ் 5 ஆவது எதிர்கால தலைவர்கள் மாநாடும் நாடளாவிய ரீதியில் சமாதானத்துக்கும் ஒன்று கூடலுக்கும் வித்திடுவதில் ஒரு மைல்கல்லாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

5 ஆவது மாநாடுக்கான தளம் இதுவரையிலும் உறுதி படுத்தப்படாத பட்சத்திலும் அதனை முதன் முறையாக இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் நடாத்த எண்ணுவதுடன் அதற்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இம் மாநாட்டில் 25 மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் வருகை தந்து, எந்த வித ஏற்றத்  தாழ்வுகளும் இன்றி இலங்கைர்யா என்ற ஒரே ஒரு அடையாளத்துடனும் சமத்துவத்துடனும் 5  நாட்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து எதிர் கால தலை முறையை ஒழுங்கான ஒரு பாதையில் வழி நடத்திச் செல்லும் எதிர்கால தலைவர்கள் ஆவதற்கு இட்டுச்செல்லும் ஒரு மாநாடே இது.

இதற்கான திட்டமிடல் ஏற்கனவே ஒன்று கூடுவோம் இலங்கையின் பிரதான அலுவகத்தில் தொடங்கியுள்ளது. இம் மாநாட்டை எவ்வாறு, வெவ்வேறு கோணங்களில் மேலும் செப்பமாக்கலாம் என்பதிலும் எவ்வாறு மாணவர்களுக்கு மேலும் செம்மைப்படுத்தப் பட்ட முறையில் புகட்டலாம் என்பதிலும் எமது ஏற்பாட்டுக் குழு மும்மரமாக செயற்பட்டு வருகின்றது.  பொது மக்கள் தொடர்பாடல் குழு 5 ஆவது எதிர் கால தலைவர்கள் மாநாட்டை  மையப் படுத்தி ஒன்று கூடுவோம் இலங்கையில் நடைபெறும் விடையங்களை பற்றிய தொடர்ச்சியான தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளனர். மேலும் தெற்கு பிரதேசதிலுள்ள ஒரு மாணவர்க்குழு அங்கு ஏற்பாடு செய்யவேண்டிய விடயங்களை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இம் முறை ஒழுங்கு படுத்தும் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் பல சவால்களை எதிர் பார்த்த வண்ணம் முழு அர்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் எப்படியாவது  இம் மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தி காட்ட வேண்டும் என்ற அவாவுடனும் ஆவலுடனும் உற்சாகமாக பணி  புரிந்து வருகின்றனர்.

Leave a Reply