எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

ஓன்று சேர்வோம் இலங்கை, நல்லிணக்த்திற்காக...


ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பை பற்றி அறிய முன்னர் நல்லிணக்கம் என்ற சொல்லை பற்றி நீங்கள் அறிவீர்களா ? இந்த நல்லிணக்கத்திட்கு பல மொழிகளிலும் பல கருத்துக்கள் காணப்படுகின்றன சமதாணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பை ஏற்படுத்துதல், சுதந்திரத்தை, ஏற்படுத்துதல் போன்றவற்றுடன் பிறட்சனையில் காணப்படுகின்ற இரு தரப்பினர்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துதல் என்பவற்றை குறிப்பிடலாம் அத்துடன் பொதுவான ஒரு விளக்கமாக கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து நல்லுறவை மீண்டும் உருவாக்குதல் எனக்கொள்ளலாம்.

இன்று எமது நாட்டை பொறுத்தவரையில் இந்த நல்லிணக்கம் என்ற வார்த்தை பரவலாக பேசப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. ஆனாலும் கூட இந்த நல்லிணக்கம் ஏன் வழியுருத்தப்படுகின்றது, எதற்காக ஏட்படுதப்பட வேண்டும் இதன் மூலம் எதனை உணர்த்தப் போகின்றோம் என்ற பல கேள்விகள் உங்களுக்கு எழலாம், இதற்கு விடைகான நாம் எமது கடந்த காலத்தையும் இன்றைய நிலைப்பாட்டையும் பற்றி சிந்திக்க வேண்டும் கடந்த முப்பது வருட காலமாக கொடிய போரின் பிடியில் சிக்கி பல கொடுமைகளயும் இன்னல்களையும் உயிர் இழப்புக்களையும் எதிர்கொண்ட எமது நாட்டில் இன்று பரவலான சமாதானமும் அமைதியும் நிலவுகின்றது ஆனாலும் எமது நாட்டு மக்களின் மனநிலையானது இன்னும் குழப்பமானதாகவும், பிற இனத்தவரை பற்றிய கலக்கம் நிறைந்ததாகவும், தெளிவான ஒரு தீர்வுக்கு வர முடியாததாகவுமே காணப்படுகின்றது இதற்கான காரணம் எமது நாட்டில் காணப்படுகின்ற இன, மத குழுக்களிடையே புரிந்துணர்வின்மையும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்லாமையுமே ஆகும். இதனை நாம் ஒரு குறையாக கூற முடியாது ஏனெனில் இத்தனை வருட காலமும் இனப்பிரச்சனையிலும் பிரிவினையிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்த மக்களிடத்தே ஓர் இரவிற்குள் சமாதானம் வந்துவிட்டது எனக்கூறுவது சாத்தியமற்றது ஆனால் இவர்களுக்கிடையே புரிந்துணர்வு மூலம் நல்லிணக்கம் ஏற்பட்டால் மட்டுமே உண்மையான சமாதானம் எனும் இலக்கு சாத்தியம் ஆகின்றது. ஏனனெனில் பல்வேறு விதமான கொள்கைகளிலும் பலவிதமான கருத்துவேருபாடுகளிலும் காணப்படுகன்ற மக்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் நல்லிணக்கம் ஆனது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

 இவ்வாறான நல்லினக்கத்தினை அடைவதையே தனது இலக்காகக்கொண்டு இயங்கிவரும் ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பினை பற்றி உங்களிடையே இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். இந்த அமைப்பானது இலங்கையின் இளம் தலைமுறையினராகிய இளைஞர்களையும் மாணவர்களையும் நோக்காக கொண்டே செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து இன மதங்களையும் சேர்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற இளைஞர்களே இவ்வமைப்பை வழிநடத்துகின்றனர்.

அத்துடன் எமது வழிகாட்டியாகவும் அறிவுரையாலர்களாகவும் பல்வேறு துறைகளில் முன்மாதிரியான நபர்களைக்கொண்ட அறங்காவலர்கள் சபையும் காணபடுகின்றது. இதில் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஒழிப்புக்கான முன்னால் நேருதவிச் செயலாளர் தூதுவர் ஜயந்த தனபால அவர்கள் காணப்படுகிறார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றி தனித்துனின்று வெற்றிகரமாக செயற்பட்டு நல்லிணக்கத்திற்காகவும், எமது நாட்டை கட்டியெளுப்புவதற்காகவும் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. தற்போது எமது அமைப்பில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த நுற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் இணைந்துள்ளன. எமது நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளில் முக்கிய நிகழ்வாக எதிர்கால தலைவர்கள் மாநாடு காணப்படுகின்றது. கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் இம் மாநாட்டின் மூலம் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 25 மாவட்டங்களில் இருந்தும் 1000 க்கு அதிகமான மாணவர்கள் ஓர் இடத்தில் ஓன்று கூடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது இதன் மூலம் பல்வேறு பட்ட இனங்களிலும் கலாச்சாரங்களிலும் இருந்து வந்த மாணவர்கள் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொள்ளவும் அவர்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் இம்மாநாடு ஒரு களமாக அமைகின்றது. அத்தோடு அவர்களுக்கு தலைசிறந்த பேச்சாளர்களின் மூலம் பல விளக்கங்கள் அளிக்கப்படுகின்றது, மற்றும் குளுச்செயற்பாடுகளின் மூலம் தலைமைத்துவம், ஆளுமை, ஐக்கியம் பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்படுவதோடு குழு மணப்பான்மை, சகோதரத்துவம் என்பன கட்டியெழுப்பப்படுகின்றது கடந்த வருடம் கண்டியில் இடம்பெற்ற இம்மாணாடானது இவ்வருடம் யாழ்நகரில் இடம்பெறவுள்ளது.


இத்துடன் எமது முயற்சிகளை முடித்து விடாமல் இதன் தொடர்ச்சியாக வேறுபட்ட மாவட்டங்களில் உள்ள இரு பாடசாலைகளை இணைத்து அவர்களிடையே CHAMPIONS OF CHANGE எனும் வேலைத்திட்டத்தினை செயட்படுத்துவத்தன் மூலம் மாணவர்கள் தாமாகவே நல்லிணக்கம் பற்றிய செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர் கடந்தகாலங்களில் இவ்வேலைத்திட்டம் மூலம் பல பாடசாலைகள் ஏனைய பாடாளைகளுடன் நல்லுறவை பேணிவருவதுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது உதாரணமாக தென்மாகாணத்தை சேர்ந்த கேகாலை வித்தியாலயம் வடமாகாணத்தை சேர்ந்த முல்லைதீவு வற்றாப்பளை பாடசாலையுடன் இணைந்து முல்லைத்தீவு மாணவர்களுக்கான கல்விக்கான உபகரணங்கள், புத்தகங்கள் வழங்குதல் கல்வி வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்ச்சி போன்ற செயற்பாடுகளை மேட்கொண்டத்தை குறிப்பிடலாம். அதனை அடுத்து கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட SCHOOL RELATION TRIP செயட்திட்டத்தில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ பிரதிநிதிகளை கொண்ட SLU Junior team ஆனது இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அப்பாடசாலைகளில் ஒன்றுகூடல்களை நடத்தி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திட்குமான செய்தியை வழங்கினர். இவ்வாறான எமது அமைப்பின் செயற்பாடுகள் தீவலாவியரீதியில் மட்டும் நின்று விடாமல் பிறநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் மூலமும் சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓன்று சேர்வோம் இலங்கை அமைப்பானது அவுஸ்திரேலியா, கனடா, நயுசிலாந்து, இங்கிலாந்து, அமேரிக்கா, தென்னாபிரிக்கா, இந்தியா, கென்னியா, கொங்கோ ஆகிய நாடுகளிலும் உத்தியோகபூர்வமாக இயங்கிவருகின்றது.

Leave a Reply