எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்
அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்
எதிர்கால தலைவர்கள் மாநாடு பருவம் 5 க்கான அறிவித்தல்
Posted by arzath areeff on 8:14 AM
எமது ஒன்றுகூடும் இலங்கை அமைப்பின் மிக முக்கிய வருடாந்த நிகழ்வான எதிர்கால தலைவர்கள் மாநாடு இன்னும் மூன்றுமாதங்களில் இடம்பெற உள்ளது, கடந்தவருடம் வடபகுதியை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் தமிழ் கலாச்சார அம்சங்களுடன் யாழ் மண்ணில் இடம்பெற்ற இந்நிகழ்வு இம்முறை இலங்கையின் தென் பகுதியில் சிங்கள கலாச்சார பிரதிபலிப்புடன் காலியில் இடம்பெற உள்ளது, இந்நிகழ்வில் தன்னார்வ தொண்டராக இணைந்து கொள்ள நீங்கள் விரும்பினால் கீழ்காணும் உரலியின் ஊடக தொடர்புகொள்ளுங்கள்
http://www.srilankaunites.org/flcform/index.php?embed=1
ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் அணியினருக்கான மீள் சந்திப்பு 2013
Posted by arzath areeff on 8:41 AM
பாரிய கடப்பாடுகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் மத்தியில் ஓன்று கூடும் இலங்கை
அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான அணியினருக்கான மீள் சந்திப்பு 2013 அண்மையில் புத்தளம்
மாவட்டத்தில் மாதம்பே "அபே கடெள்ள" யில் இடம்பெற்றது இதில் எமது அமைப்பின் உட்கட்டமைப்பினை உருவாக்குவது
தொடர்பாகவும் ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் பிரதான இலக்குகளை அடைவதற்கு
முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பிரதானமாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது நாளில் அணி அங்கத்தவர்கள் தங்களது வேலைகளின் அடிப்படையில்
தங்களுக்கு உரித்தான துறைகளுக்கு நியமிக்கப்பட்டனர் அத்துடன் அன்றைய தினம் எமது
அணி அங்கத்தவரான விந்தியா பீரிஸ் பிறந்ததினமாகையால் அவரை வாழ்த்தி பரிசுகளும்
வழங்கப்பட்டது . இரண்டாவது நாளில் முதலாவதாக அணியினை
கட்டியெலுப்புவதட்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன இதனூடாக புதிய அங்கத்தவர்களுடனான
பரஸ்பர அறிமுகம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து திட்டமிடல் அமர்வு இடம்பெற்றது இதில் எதிர்காலத்தில் நடத்தப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் பற்றியும் நிகழ்ச்சிகள்பற்றியும் திட்டங்கள் முன்வேய்க்கப்பட்டது அடுத்ததாக ஓன்று கூடும் இலங்கையின் அமைப்பு வட்டம்
விபரிக்கப்பட்டதுடன் இலக்குகள் பற்றிய புள்ளிவிவரங்களும்
ஆராயப்பட்டன. அதனையடுத்து துறைகளை உருவாக்குதலும் வினைத்திறனாக
செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது மேலும் துறைகளுக்கு தமக்கான
கடமைகளும் விளக்கப்பட்டன அத்துடன் ஒவ்வொரு துறையினரும் தமக்கே உரித்தான சுய
இலக்குகளை வகுத்துக்கொண்டனர். அன்றையதினம் மாலைவேளையில் சிறுவர் இல்ல சிறார்களுடன்
தங்களது நேரத்தை செலவிடமுடிந்தது. அதன்பின்னர் ஒவ்வொரு துறையினரும்
தாங்கள் தயார்செய்த தங்களது அணி பற்றிய விளக்கத்தினை அனைவருக்கும் வழங்கினர்.
அத்துடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன மூன்றாவது நாளில் பிரதானமாக
ஒவ்வொரு துறையினரும் தாங்கள் ஈடுபடும் வெளித்திட்டம் பற்றிய மாதாந்த அறிக்கையினை
சமர்பிக்கவேண்டியது பற்றி வலியுறுத்தப்பட்டது இந்நிகழ்வின்மூலம் ஓன்று கூடும் இலங்கை
அமைப்பிற்கு புதிய ஊக்கமும் உத்வேகமும் அழிக்கப்பட்டுள்ளதுடன்
துரிதசெயற்பாடுகளுக்கான வழிகாட்லகளும் வழங்கப்பட்டுள்ளன இதன் மூலம் தற்போது
காணப்படும் துறைகள் பின்வருமாறு
- நல்லிணக்க நிலையத்துறை
- மக்கள் தொடர்பு துறை
- சஹாசார இதழ் துறை
- நிர்வாக துறை
- பாடசாலைகள் தொடர்பு துறை
- பிராந்திய பிரதிநிதிகள் துறை
- எதிர்கால தலைவர்கள் மாநாட்டு துறை
- SHOW YOU CARE (பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கான) துறை என்பனவாகும்.
முல்லைத்தீவு நல்லிணக்க மையமும் தொழில் பயிற்சிகளும்
Posted by Unknown on 11:33 PM
யுத்தத்தின்
பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய முல்லைத்தீவு மக்களுடைய மனதில்
அவர்களது எதிர்காலத்தை குறித்து பல்வேறு
கேள்விகள். சொந்த இடத்திற்கு திரும்பிய திருப்தி இவர்களிடம் காணப்படுகின்ற
போதிலும், மீள்குடியேற்றப்பட்டு 3 வருடங்கள் கழிந்த நிலையில்
வாழ்கையில் முன்னேற்றங்கள் இல்லையே என்ற ஏக்கமும் இவர்களிடம் காணப்படுகின்றது. முக்கியமாக உயர் தரக் கல்வியை
முடித்தவர்கள், பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டவர்கள் அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
ஏனெனின் உயர் தரத்தில் சித்தியடைந்து சிலர் மட்டுமே பல்கலைக்கழகம்
செல்கின்றனர். வசதியுடைய சிலர்
நகர்ப்புறங்களிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்வதோடு ஏனையோர் தொழில்
வாய்ப்புக்களை தேடிச் செல்கின்றனர். மிகவும் குறைந்த வாய்ப்புகள் மற்றும்
வளங்களின் காரணமாகவே இந்நிலை அங்கு நிலவுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றத்தை
ஏற்படுத்தி முல்லைத்தீவு இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சிறப்பான
எதிர்காலத்தை அமைத்துகொடுப்பதை நோக்காகக் கொண்டு, இவர்களுக்கு தொழில்
பயிற்சிகளை வழங்குவதற்காக, ஒன்று கூடுவோம்
இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடுவோம்
இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையமானது கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை
எனும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்
நல்லிணக்க மையத்தினூடாக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, வர்த்தக முயற்சியாண்மை போன்றவற்றில் மாணவர்கள் தமது
திறன்களை விருத்திசெய்வதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலவசமாக
வழங்கப்படும் இவ் பயிற்சி நெறிகள் ஊடாக மாணவர்கள் முழுமையான பயனை
பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கருத்திற் கொண்டு கணணி, இன்டர்நெட் போன்ற பல வசதிகள் இங்கு
ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியின் ஆரம்பம்
Posted by Unknown on 2:30 AM
பெண்களுக்கு எதிரான வன்முறையானது தீர்வற்ற ஒன்றாக, காலங் காலமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் இலங்கையிலும் இப்பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வரும் செயலாக காணப்படுகின்றது. முக்கியமாக கொழும்பு போன்ற பிரதான நகர்ப்புறங்களில் அதிகமான சந்தர்ப்பங்களில் பெண்கள் பல வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதிலும் முக்கியமாக பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்களிடம் வார்த்தை பிரயோகங்களால், உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் வன்முறைக்குட்பட்ட அனுபவங்கள் அதிகமாகவே உள்ளன. சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆய்வொன்றின் அடிப்படையில், 15 தொடக்கம் 45 வயதிட்கிடைப்பட்ட 70 வீதமான பெண்களிடம் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, பாலியல் ரீதியான வன்முறைக்குட்பட்ட அனுபவங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் நீண்ட காலமாக அமைதியாகவே இருந்து வருகின்றனர். இந்த அமைதியை கலைப்பதற்கான ஒரு முன்னெடுப்பே ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SHOW YOUR CARE எனும் நிகழ்ச்சித்திட்டமாகும். இளம் தொண்டர்களையும், பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று இப்பிரச்சினைக்கு எதிர்நின்று செயற்படுவதன் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பு தீர்மானித்ததற்கிணங்க, இத்திட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலுள்ள திறந்த வெளி திரையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இளம் தொண்டர்களும், கொழும்பிலுள்ள பிரபல ஆண் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பாதிப்புக்கள் எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகின்றது என்பதை மையப்படுத்திய மக்கள் அரங்கம் (Forum Theatre) நிகழ்ச்சியும், கலந்துரையாடல்களும் நடைபெற்றிருந்ததோடு வித்தியாசமான வயதெல்லைகளையும், கலாசார பின்னணிகளையும் கொண்ட பெண்கள் பொதுசன போக்குவரத்தின்போது தாம் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

வெற்றிகரமாக நடைபெற்ற முதற்கட்ட SHOW YOUR CARE திட்டத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதேவேளை இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கண்டி மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 ஆவது எதிர் கால தலவைர்கள் மாநாட்டிற்கான ஆயத்தங்கள் ஆரம்பம்
Posted by Chris Xavier on 4:43 AM

ஆம் , யாழ் மண்ணில் வெற்றி கரமாக நடந்தேறிய மாநாட்டை தொடர்ந்து இப்போது 5 ஆவது முறையாக எதிர் கால தலைவர்கள் மாநாட்டை நடாத்தும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. 4 ஆவது மாநாடு நடந்து முடிந்து எம் ஒன்று கூடும் பணியின் தாகம் தணியும் முன் எமது 5 ஆவது மாநாட்டுக்கான வேலைகளை எம்முடன் இணைந்து பல இள இரத்தங்கள் முன்னெடுத்து நடாத்திவருகின்றனர் . இம்முறை நடத்த இருக்கும் இவ் 5 ஆவது எதிர்கால தலைவர்கள் மாநாடும் நாடளாவிய ரீதியில் சமாதானத்துக்கும் ஒன்று கூடலுக்கும் வித்திடுவதில் ஒரு மைல்கல்லாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
5 ஆவது மாநாடுக்கான தளம் இதுவரையிலும் உறுதி படுத்தப்படாத பட்சத்திலும் அதனை முதன் முறையாக இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் நடாத்த எண்ணுவதுடன் அதற்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இம் மாநாட்டில் 25 மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் வருகை தந்து, எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி இலங்கைர்யா என்ற ஒரே ஒரு அடையாளத்துடனும் சமத்துவத்துடனும் 5 நாட்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து எதிர் கால தலை முறையை ஒழுங்கான ஒரு பாதையில் வழி நடத்திச் செல்லும் எதிர்கால தலைவர்கள் ஆவதற்கு இட்டுச்செல்லும் ஒரு மாநாடே இது.
இதற்கான திட்டமிடல் ஏற்கனவே ஒன்று கூடுவோம் இலங்கையின் பிரதான அலுவகத்தில் தொடங்கியுள்ளது. இம் மாநாட்டை எவ்வாறு, வெவ்வேறு கோணங்களில் மேலும் செப்பமாக்கலாம் என்பதிலும் எவ்வாறு மாணவர்களுக்கு மேலும் செம்மைப்படுத்தப் பட்ட முறையில் புகட்டலாம் என்பதிலும் எமது ஏற்பாட்டுக் குழு மும்மரமாக செயற்பட்டு வருகின்றது. பொது மக்கள் தொடர்பாடல் குழு 5 ஆவது எதிர் கால தலைவர்கள் மாநாட்டை மையப் படுத்தி ஒன்று கூடுவோம் இலங்கையில் நடைபெறும் விடையங்களை பற்றிய தொடர்ச்சியான தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளனர். மேலும் தெற்கு பிரதேசதிலுள்ள ஒரு மாணவர்க்குழு அங்கு ஏற்பாடு செய்யவேண்டிய விடயங்களை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இம் முறை ஒழுங்கு படுத்தும் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் பல சவால்களை எதிர் பார்த்த வண்ணம் முழு அர்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் எப்படியாவது இம் மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தி காட்ட வேண்டும் என்ற அவாவுடனும் ஆவலுடனும் உற்சாகமாக பணி புரிந்து வருகின்றனர்.